முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!


முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்று (05) இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையான அவரை, விசாரணைகளின் பின்னர் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்திற்கு ஊழியர்களை நியமித்தமை, அவர்களை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே அவர் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த விசாரணையின் தொடர்ச்சியாகவே அகில விராஜ் காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.