நாட்டின் மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு!


நாட்டின் மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் இன்று (31) அறிவிக்கப்பட உள்ளது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகளை ஆய்வு செய்த பிறகு, உள்நாட்டு எரிபொருள் விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படுமா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று காலை உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு பதிவாகியுள்ளது.

இதன்படி, ஒரு பேரல் பிரென்ட் (Brent) கச்சா எண்ணெயின் விலை 89.69 அமெரிக்க டொலராகவும், ஒரு பேரல் WTI கச்சா எண்ணெயின் விலை 84.50 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.

எரிபொருள் விலைச் சூத்திரத்தின் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.