நிலவும் சீரற்ற வானிலை – பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் வௌியான தகவல்!
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாணத்தின் 6 கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையெனில் விடுமுறை வழங்குமாறு அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நயோமி ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி ஹட்டன், கொத்மலை, நுவரெலியா, கம்பளை, கண்டி மற்றும் தெல்தெனிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளில், அப்பகுதிகளில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு விடுமுறை வழங்குவதா இல்லையா என்பது தொடர்பான இறுதி முடிவை அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களே எடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவுறுத்தல் அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Tags:
இலங்கை செய்தி
