அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு!


2026 ஜூலை மாதத்திற்கான 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவு இன்று (31) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதற்கட்டத்தின் கீழ் 621,638 முதியோர்களுக்கு 3,108,190,000 ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இரண்டாம் கட்டத்தின் கீழ் 77,324 முதியோர்களுக்கு 386,620,000 ரூபா நிதி வழங்கப்படவுள்ளது.

இரண்டு கட்டங்களையும் சேர்த்து மொத்தமாக 698,962 பயனாளிகளுக்கு 3,494,810,000 ரூபா நிதி வழங்கப்படவுள்ளது.

பயனாளிகள் இன்று முதல் தங்களுக்கான கொடுப்பனவை ‘அஸ்வெசும’ வங்கிக் கணக்குகள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.