டெங்கு நோயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக அதிகரிப்பு!
நாட்டில் டெங்கு நோயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அப்பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இந்த ஆண்டின் இதுவரை 84,724 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
அவற்றில், ஜூலை மாதத்தில் மட்டும் நேற்று (30) வரை 29,350 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக, கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 17,971 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 16,814 பேரும், கண்டி மாவட்டத்தில் 5,873 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாகாணங்களின் அடிப்படையில், மேல் மாகாணத்தில் 44,829 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ள நிலையில், தென் மாகாணத்தில் 12,738 பேரும், மத்திய மாகாணத்தில் 7,370 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
Tags:
இலங்கை செய்தி
