டெங்கு பரவலால் கொழும்பு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஒன்லைன் முறையில்!


கொழும்பு பல்கலைக்கழகத்தில் நிலவும் டெங்கு பரவல் காரணமாக, அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் ஒன்லைன் முறையில் மாற்றுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

கல்வி நடவடிக்கைகள் ஒன்லைனுக்கு மாற்றப்பட்ட போதிலும், மாணவர் விடுதிகள் (Hostels) தொடர்ந்து திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த சில நாட்களாக பல்கலைக்கழக வளாகத்தினுள் புகையூட்டும் (Fogging) நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

டெங்கு பரவல் காரணமாக சௌந்தர்ய  பல்கலைக்கழகம் மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகம் ஆகியனவும் இதற்கு முன்னர் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.

கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 13ஆம் திகதியும், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 21ஆம் திகதியும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.