தவறான மருந்தால் பார்வை இழந்த மேலும் 4 நோயாளிகளுக்கு தலா ரூ.10 இலட்சம் இழப்பீடு!
கண் சத்திர சிகிச்சைக்குப் பின்னர் Prednisolone Acetate மருந்தைப் பயன்படுத்தியதால் பார்வை இழந்த மேலும் 4 நோயாளிகளுக்கு தலா ரூ.10 இலட்சம் இழப்பீடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2023 ஆம் ஆண்டு, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை மேற்கொண்ட சில நோயாளிகள் குறித்த மருந்தைப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து பார்வை இழந்த அல்லது பார்வை கடுமையாக பாதிக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
இது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இதற்கு முன் பார்வை இழந்த 17 நோயாளிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
பின்னர் நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரையின் பேரில், மேலும் 4 நோயாளிகளும் இழப்பீட்டுக்கு தகுதியானவர்கள் என உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர்களுக்கும் தலா ரூ.10 இலட்சம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
