இலங்கையில் டெங்கு உயிரிழப்புகள் 45 ஆக உயர்வு; 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!
இலங்கையில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், நாடு முழுவதும் இதுவரை 65,034 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொசுக்கள் பெருகும் இடங்களை அகற்றுதல், சுற்றுப்புறத்தை சுத்தமாகப் பராமரித்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்றுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, கொழும்பு பல்கலைக்கழகத்தில் 71 மாணவர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அவர்களில் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags:
இலங்கை செய்தி
