அரச ஊழியர்களுக்கு சொத்து விபரங்களை வழங்க ஒருவாரம் கால அவகாசம்!
2023ஆம் ஆண்டின் இலக்கம் 9 என்ற ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய அரச ஊழியர்கள் தங்கள் சொத்து விபரங்களை சமர்ப்பிக்க வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்று (30) நிறைவடையவிருந்தது.
எனினும், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப தடங்கல்கள் காரணமாக, சொத்து விபரங்களை சமர்ப்பிப்பதில் சிரமங்களை எதிர்கொள்பவர்களுக்கு அடுத்த மாதம் 7ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை நிவாரண காலம் வழங்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் அதிகமானோர் இணையத்தளத்தை அணுக முயற்சித்ததாலேயே இந்த தடங்கல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சொத்து விபரங்களை சமர்ப்பிக்க தவறும் அரச ஊழியர்களிடமிருந்து தண்டப்பணம் அறவிடப்படும் எனவும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அனைத்து அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் அறிவித்துள்ளது.
Tags:
இலங்கை செய்தி
