நாட்டில் டெங்கு பாதிப்பு தீவிரம்: 73,455 பேர் பாதிப்பு – 50 பேர் உயிரிழப்பு!


நடப்பாண்டில் இதுவரை இலங்கையில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 73,455 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை 50 பேர் டெங்கு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

நேற்று மட்டும் 1,025 புதிய டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாகாணங்களின் அடிப்படையில், மேற்கு மாகாணத்தில் அதிகபட்சமாக 38,700 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

மாவட்ட ரீதியாக, கம்பஹா மாவட்டத்தில் 15,341 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 14,625 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூலை மாதத்தின் முதல் 16 நாட்களிலேயே 18,076 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ள நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக 21,538 நோயாளிகள் பதிவாகியிருந்ததாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.