இலங்கை ஆசிரியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
2026ஆம் ஆண்டுக்கான தேசிய பாடசாலை ஆசிரியர்களின் வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்களை இணையவழி ஊடாக சமர்ப்பிக்குமாறு கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய, தேசிய பாடசாலை ஆசிரியர்கள் 2026 ஜூலை 16ஆம் திகதி முதல் ஜூலை 30ஆம் திகதி வரை கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையத்தளத்தின் ஊடாக தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.
இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியை 2026 ஜூலை 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தாங்கள் சம்பளம் பெறும் பாடசாலையின் அதிபரிடம் ஒப்படைப்பது கட்டாயமாகும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், ஆசிரியர்களால் தனிப்பட்ட முறையில் கொண்டுவரப்படும் அல்லது தபால் மூலம் அனுப்பப்படும் எந்தவொரு விண்ணப்பங்களும் அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Tags:
இலங்கை செய்தி
