இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் சரிவு!


இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (13) மீண்டும் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 11 ஆம் திகதி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 378,000 ரூபாவுக்கு விற்பனையான நிலையில், இன்று அதன் விலை 2,000 ரூபாவால் குறைந்து 376,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 376,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 346,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,250 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் நிலவும் விலை மாற்றங்களின் தாக்கத்தால் தங்கத்தின் விலை தினசரி ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருவதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, தங்கம் வாங்கத் திட்டமிடுபவர்கள் அன்றைய சந்தை விலையை உறுதிப்படுத்திய பின்னர் கொள்வனவு செய்வது சிறந்தது என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.