உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு தொடர்பில் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!
உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதிக்கலாமா என்பது தொடர்பான உத்தரவை எதிர்வரும் 23ஆம் திகதி அறிவிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த மனு இன்று (16) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டது.
பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் குழுவொன்றினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுதாரர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை பரிசீலித்த பின்னர், மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாமா என்பது தொடர்பான உத்தரவை ஜூலை 23ஆம் திகதி வழங்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
Tags:
இலங்கை செய்தி
