அதிவேகமாக முன்னேறும் நாடுகளில் இலங்கைக்கு 4வது இடம்... சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம்!
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 2026 ஆம் ஆண்டுக்கான முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை அறிக்கையின்படி, உலகின் அதிவேகமாக முன்னேறும் நாடுகளில் ஒன்றாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, அதிவேகமாக முன்னேறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 4வது இடத்தை பெற்றுள்ளது.
இந்தப் பட்டியலில் வியட்நாம் முதலிடத்தையும், பெலிஸ் இரண்டாவது இடத்தையும், மொசாம்பிக் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
மேலும், கடன் வெளிப்படைத்தன்மை மற்றும் முதலீட்டாளர் உறவுகள் ஆகிய துறைகளில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கடன் வெளிப்படைத்தன்மை தொடர்பான தரவரிசையிலும் இலங்கை 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
