எய்ட்ஸ் தொற்று மீண்டும் உலகளவில் தீவிரமடையும் அபாயம் - ஐ.நா. எச்சரிக்கை!


எய்ட்ஸ் (HIV/AIDS) தொற்று மீண்டும் உலகளவில் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரேசிலில் நடைபெற்ற சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டில் சர்வதேச நிதியுதவி 18 சதவீதம் குறைந்து 7.3 பில்லியன் டொலர்களாக சரிந்துள்ளது. இது கடந்த இரண்டு தசாப்தங்களில் பதிவான மிகக் குறைந்த நிதி உதவி அளவாகும்.

அமெரிக்காவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் மற்றும் நிதி நிறுத்தங்கள் காரணமாக, ஆப்பிரிக்க நாடுகளில் எய்ட்ஸ் தடுப்பு மருந்துகள், பரிசோதனைத் திட்டங்கள் மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையான நிதியுதவியும் சர்வதேச ஒத்துழைப்பும் மீண்டும் உறுதிப்படுத்தப்படாவிட்டால், கடந்த 30 ஆண்டுகளாக எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.