சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை சரிவு!
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களின் பின்னணியில், இன்று (28) தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் சரிவு பதிவாகியுள்ளது.
அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,049.69 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 57.41 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.
இலங்கையின் உள்நாட்டு சந்தையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வரும் நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலைச் சரிவின் தாக்கம் உள்நாட்டு தங்க விலையிலும் எதிரொலிக்கக்கூடும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், உள்நாட்டுத் தங்க விலையில் ஏற்படும் மாற்றம் நாணய மாற்று விகிதம், இறக்குமதி செலவு மற்றும் உள்ளூர் சந்தை நிலவரம் உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்தே அமையும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
Tags:
உலகம்
