முட்டை விலையில் திடீர் மாற்றம்!


இலங்கையில் இன்று (27) முதல் முட்டை விலை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மக்காச்சோளத் தட்டுப்பாடு மற்றும் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக முட்டை உற்பத்தி கணிசமாகக் குறைந்துள்ளதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால், விலையை உயர்த்தாமல் முட்டை உற்பத்தித் தொழிலை தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், ஏனைய விலங்குத் தீவனங்களின் விலைகளும் அதிகரித்துள்ளதால் உற்பத்திச் செலவு உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, வெள்ளை முட்டையின் மொத்த விற்பனை விலை 43 ரூபாவாகவும், சிவப்பு முட்டையின் மொத்த விற்பனை விலை 44 ரூபாவாகவும் இன்று முதல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் முட்டையின் சில்லறை விலை தற்போது 50 ரூபா வரை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.