25 ஆண்டுகளுக்கு முன்னைய கொலை வழக்கு: ஐவருக்கு மரண தண்டனை விதித்த கம்பஹா மேல் நீதிமன்றம்!
குருநாகல் – வெலகெதர பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் ஐந்து பேருக்கு கம்பஹா மேல் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (17) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2001 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி, வெலகெதர, தியகவிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த குழுவினர், அங்கிருந்தவர்கள் மீது கற்கள், தடிகள் மற்றும் வாள்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் படுகாயமடைந்தனர். சம்பவம் தொடர்பான சாட்சியங்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐந்து பேரும் கொலை மற்றும் கடுமையான தாக்குதல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, குற்றவாளிகளான ஐவருக்கும் கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
Tags:
இலங்கை செய்தி
