அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வெனிசுவேலாவில் அவசர நிலை பிரகடனம்: அமெரிக்கா உதவ தயார் என அறிவிப்பு!
வெனிசுவேலாவில் வெறும் 40 நொடிகள் இடைவெளியில் ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 அளவில் சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
இந்த தொடர் நிலநடுக்கங்களால் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டதுடன், மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.
குறிப்பாக தலைநகர் கராகஸில் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பல கட்டடங்கள் சேதமடைந்ததுடன், இடிபாடுகள் காரணமாக நகரின் சில பகுதிகள் புழுதிப்படலத்தால் சூழப்பட்டுள்ளன.
இந்த பேரிடரைத் தொடர்ந்து நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதுடன், மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், வெனிசுவேலாவை தாக்கிய இந்த இரு நிலநடுக்கங்களும் பாரிய சேதத்தையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்கா தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும், அரசாங்க முகமைகள் உடனடி நடவடிக்கைக்குத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
