அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே இதயவியல் பிரிவில் அனுமதி!


அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயவியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதயம் தொடர்பான திடீர் நோய் நிலைமையால் அவர் குறித்த பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சலே, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் காவலில் விசேட மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த காலப்பகுதியில் அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்ததுடன், விசாரணைக்கு ஒத்துழைக்கவும் மறுத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயவியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.