அஸ்வெசும பயனாளிகளுக்கான முக்கிய அறிவிப்பு!
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஜூன் மாதத்திற்கான இரண்டாம் கட்டக் கொடுப்பனவுகளை இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இந்தக் கொடுப்பனவு 270,025 தகுதியான குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இதற்காக மொத்தமாக 3,287,163,750 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த தொகை இன்று உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
.jpg)