க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!


2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையை திட்டமிடப்பட்ட திகதியிலேயே நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பரீட்சைக்குத் தயாராகுவதற்காக மாணவர்களுக்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பரீட்சை அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.