தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
2026 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கான விண்ணப்பப் பதிவு இன்று (27.06.2026) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தகுதியுடையவர்கள் தங்களது விண்ணப்பங்களை 2027 மார்ச் 08ஆம் திகதி வரை கீழ்க்கண்ட இணையதளம் ஊடாக ஒன்லைன் முறையில் சமர்ப்பிக்கலாம்:
https://onlineexams.gov.lk/eic
மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 09ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பரீட்சை நேரங்கள்:
இரண்டாம் வினாத்தாள் – காலை 09.30 மணி முதல் 10.45 மணி வரை
முதலாம் வினாத்தாள் – காலை 11.15 மணி முதல் 12.15 மணி வரை
இது தொடர்பான மேலதிக தகவல்களை இலங்கை பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.
Tags:
இலங்கை செய்தி
