எரிபொருள் விலை குறைப்பு குறித்து நாடாளுமன்றில் முக்கிய அறிவிப்பு!


நாடாளுமன்றில் எரிபொருள் விலை குறைப்பு மற்றும் தனிநபர் வாழ்க்கைச் செலவு தொடர்பாக அரசாங்கம் முக்கிய விளக்கங்களை வழங்கியுள்ளது. 

வலுசக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க உரையாற்றுகையில், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் குறையும் சந்தர்ப்பங்களில் அதன் நன்மை நுகர்வோருக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

எனினும், எரிபொருள் விலை மாற்றம் எப்போது செய்யப்படும் என்பது தற்போதைய நிலையில் உறுதியாக கூற முடியாது என்றும், அது முழுமையாக உலக சந்தை நிலவரங்களைப் பொறுத்ததாக இருக்கும் என்றும் அவர் விளக்கினார்.

மேலும், டீசலுக்கு ரூ.100 மற்றும் பெற்றோலுக்கு ரூ.20 மானியம் வழங்கப்பட்டு வருவதாகவும், இந்த மானியங்கள் அனைவருக்கும் சமமாக சென்றடையவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதற்காக அரசாங்கம் ரூ.57 பில்லியன் ஒதுக்கியுள்ளதுடன், அந்த தொகை இன்னும் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், ஒரு நபருக்கு மாதம் ரூ.17,700 வருமானத்தில் வாழ முடியும் என்ற தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் கணிப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டால் அந்த அளவு போதுமானதல்ல என்றும் அவர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.