‘அஸ்வசும’ கொடுப்பனவு – தகுதி உறுதிப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு மாத்திரம் வழங்க நடவடிக்கை!


இனிவரும் காலங்களில் ‘அஸ்வசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் தகுதி உறுதிப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு மட்டுமே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான தரவுப் புதுப்பிப்பு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த காலத்தில் இடைநிலை மற்றும் ஆபத்துக்குள்ளாகக்கூடிய பிரிவுகளில் உள்ள சில பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அந்தக் குடும்பங்கள் தற்போது ஏழ்மை அல்லது மிக ஏழ்மையான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தால், மீண்டும் தகுதி மதிப்பீட்டின் அடிப்படையில் நன்மைகளைப் பெற வாய்ப்பு வழங்கப்படலாம் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அஸ்வசும தொடர்பான தகவல்கள் புதுப்பிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் தங்களது சரியான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை உரிய முறையில் சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.