பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் ஏற்பாடு!
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை புனித தலங்களுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக விசேட ரயில் சேவைகளை இயக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
வழக்கமான ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக, இந்த விசேட சேவைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஜூன் 27ஆம் திகதி முதல் ஜூன் 30ஆம் திகதி வரை இந்த விசேட ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
Tags:
இலங்கை செய்தி