சர்வதேச சந்தையில் அதிரடியாக குறைந்த தங்கம் மற்றும் வெள்ளி விலைகள்!
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதால் நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,083.88 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது. அதேபோல், ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 60.96 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இதேவேளை, இலங்கையிலும் தங்கத்தின் விலை இன்று (24) குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, தங்கத்தின் விலை ரூ.2,000 குறைந்து ரூ.380,000 ஆக பதிவாகியுள்ளது.
தற்போதைய சந்தை நிலவரப்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.349,600 ஆகவும், 24 கரட் தங்கம் ஒரு கிராம் ரூ.47,750 ஆகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் ரூ.43,700 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் அமெரிக்க டொலரின் பெறுமதி மாற்றங்கள் காரணமாக உள்ளூர் தங்க விலையிலும் இதன் தாக்கம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
