O/L பரீட்சார்த்திகளுக்கான விடைத்தாள் மறுபரிசீலனை விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!


2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (G.C.E. O/L) பரீட்சை விடைத்தாள்களை மறுபரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் ஒன்லைன் முறைமையின் மூலம் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் ஜூன் 25ஆம் திகதி முதல் ஜூலை 8ஆம் திகதி வரை இணையவழி மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்க, இன் “Exam Information Centre” பகுதிக்குச் செல்லலாம் அல்லது வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்கள், 2025 சாதாரண தரப் பரீட்சைக்குப் பயன்படுத்திய பரீட்சை சுட்டெண் (Index Number) மற்றும் தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தைப் பயன்படுத்த வேண்டும். புதிய விண்ணப்பதாரர்கள் அடையாள அட்டை மற்றும் தொலைபேசி இலக்கத்தைப் பதிவு செய்து கணக்கை உருவாக்க வேண்டும்.

ஒரு பாடத்திற்கான மறுபரிசீலனை கட்டணம் 200 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், கட்டணத்தை கடன் அட்டை, வரவு அட்டை அல்லது தபால் அலுவலகம் மூலம் செலுத்த முடியும்.

ஒரு பரீட்சார்த்தி ஒரு விண்ணப்பத்தை மட்டுமே சமர்ப்பிக்க முடியும் என்பதால், அறிவுறுத்தல்களை கவனமாக வாசித்து விண்ணப்பிக்குமாறும், கட்டணம் செலுத்தப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.