பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!


முல்லைத்தீவு முதல் காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளுக்காக வளிமண்டலவியல் திணைக்களம் விசேட எச்சரிக்கை அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இன்று (02) முற்பகல் 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல், நாளை (03) முற்பகல் 10.30 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவித்தலின்படி, மேற்குறிப்பிட்ட கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். மேலும், குறித்த கடற்பகுதிகள் இடைக்கிடையே கொந்தளிப்பான நிலையைக் காணக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்த கடல் பிராந்தியங்களில் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் கடற்சார் சமூகத்தினர் மிகுந்த அவதானத்துடனும் பாதுகாப்புடனும் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.