நாட்டின் பணவீக்கம் 7% வரை அதிகரிக்கும் அபாயம் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்து வரும் போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக இலங்கையின் பணவீக்கம் 7 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், தற்போது 5.4% - 5.5% ஆக உள்ள பணவீக்கம், எரிபொருள் விலை உயர்வு மற்றும் நுகர்வில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்படாத காரணங்களால் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக கூறினார்.

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த வாரம் நாணயக் கொள்கை இறுக்கமாக்கப்பட்டதாகவும், அடுத்த மூன்று மாதங்களில் தேவையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பணவீக்க உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், சட்டப்பூர்வமாக ஈட்டப்பட்ட பணத்தை வங்கிகள் ஊடாக இலங்கைக்கு அனுப்புவதில் எந்தத் தடையும் இல்லை என்றும், சட்டவிரோதமான பணப் பரிமாற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.