உயிர்க்காப்பு துப்பாக்கி உரிமையாளர்களுக்கு புதிய நடைமுறை – பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு!


2026 ஆம் ஆண்டிற்கான உயிர்க்காப்பு துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பித்துள்ள அனைத்து உரிமையாளர்களுக்கும் புதிய நடைமுறையொன்றை பின்பற்றுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதன்படி, உரிமம் புதுப்பிக்கப்பட்டு ஆறு மாதங்கள் நிறைவடைந்ததும், உரிமையாளர்கள் தங்களது துப்பாக்கிகளை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அங்கு துப்பாக்கியின் செயல்திறன் மற்றும் அதன் இலக்கம் உரிமத்தில் பதிவுசெய்யப்பட்ட இலக்கத்துடன் பொருந்துகிறதா என்பது பரிசோதிக்கப்பட்டு, அதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த நடைமுறை இனிவரும் காலங்களில் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், துப்பாக்கிகள் மற்றும் உரிமங்களை பரிசோதித்து உரிய சான்றிதழ்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு பொலிஸ் அதிபரால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே, 2026 ஆம் ஆண்டிற்கான உயிர்க்காப்பு துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பித்துள்ள அனைவரும், ஆறு மாத காலம் நிறைவடைந்த பின்னர் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கியை சமர்ப்பித்து தேவையான சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.