உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்கான விண்ணப்ப காலம் நீடிப்பு!


இதுவரை விண்ணப்பிக்கத் தவறிய பரீட்சாத்திகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக இணையவழி (Online) மூலம் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 2026.06.26 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தின் ஊடாக 2026.06.26 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்பட்டால், உதவிக்காக கீழ்க்கண்ட தொலைபேசி இலக்கங்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொழில்நுட்பப் பிரிவு (Online Branch): 011 3661122 / 011 3671568
பாடசாலைப் பரீட்சைகள் மதிப்பீட்டுப் பிரிவு: 011 2785231 / 011 2785681