அஸ்வெசும ஜூன் மாத கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு!


‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜூன் மாத கொடுப்பனவுகளை இன்று (18) வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, 1,373,248 பயனாளி குடும்பங்களுக்காக மொத்தமாக ரூ. 10,904,801,250 தொகை இன்று சம்பந்தப்பட்ட பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமல் கொடவலகெதர, இம்முறை வழங்கப்படும் கொடுப்பனவு ‘அஸ்வெசும’ முதற்கட்ட பயனாளிகளுக்கே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனால், இன்று முதல் தகுதியான பயனாளிகள் தங்களது வங்கி கணக்குகள் ஊடாக குறித்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியும்.