க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு: புத்தளம் சாஹிரா கல்லூரி 75% சித்தி வீதத்துடன் சிறப்பு சாதனை!
அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த (சாதாரண தரம்) – 2025 (2026) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், புத்தளம் சாஹிரா கல்லூரி (தேசிய பாடசாலை) 75% ஒட்டுமொத்த சித்தி வீதத்தைப் பெற்று குறிப்பிடத்தக்க சாதனையைப் பதிவு செய்துள்ளது.
இம்முறை பாடசாலையிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் பெரும்பாலோர் உயர்தரக் கல்விக்குத் தகுதி பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
மொத்தமாக தோற்றிய மாணவர்கள் : 167
சித்தியடைந்தோர் : 125
ஒட்டுமொத்த சித்தி வீதம் : 75%
வகுப்புவாரியான பெறுபேறுகள்
| வகுப்பு | தோற்றியோர் | சித்தியடைந்தோர் | சித்தி வீதம் |
|---|---|---|---|
| 11A | 28 | 21 | 75% |
| 11B | 25 | 17 | 68% |
| 11C | 23 | 14 | 61% |
| 11D | 24 | 18 | 75% |
| 11E | 22 | 21 | 95% 🏆 |
| 11F | 20 | 16 | 80% |
| 11G | 25 | 18 | 72% |
இதில், 11E வகுப்பு 95% சித்தி வீதத்துடன் முதலிடத்தையும், 11F வகுப்பு 80% சித்தி வீதத்துடன் அடுத்த இடத்தையும் பெற்றுள்ளது.
மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட தரம் 11 பகுதித் தலைவர் S.B. Seyad Ahmed, இருமொழிப் பிரிவு இணைப்பாளர் S.R.M.M. Azard மற்றும் வகுப்பாசிரியர்களுக்கு பாடசாலை நிர்வாகம் விசேட நன்றிகளைத் தெரிவித்துள்ளது.
மேலும், பாட ஆசிரியர்கள், அதிபர், பிரதி அதிபர் S.S.M. Rasadh (தரம் 10, 11 பொறுப்பாளர்), பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் மற்றும் சாதனை படைத்த மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் பாடசாலை சமூகம் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.
