க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!


2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வார இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

விடைத்தாள் திருத்தம் மற்றும் பெறுபேறுகளை ஒழுங்குபடுத்தும் இறுதிக்கட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் கல்வி நாட்காட்டியின்படி திட்டமிடப்பட்ட திகதிகளிலேயே நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், பாடத்திட்டங்களை நிறைவு செய்வதில் தாமதம் ஏற்படாத வகையில், தேவையானால் மேலதிக நேரத்தை ஒதுக்கி கற்பித்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்யுமாறு அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.