‘பிரஜா சக்தி – ஆயிரம் கிராமங்கள்’ வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்!
கிராமிய மக்களின் வறுமையை குறைத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ‘பிரஜா சக்தி’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1,000 அபிவிருத்தித் திட்டங்கள் நாளை (02) ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிராமிய அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
சமூக அபிவிருத்தி சபைகள் மூலம் அடையாளம் காணப்பட்ட உற்பத்திப் பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்கு நேரடியாக பங்களிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 25,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குத் தேவையான நிதி அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
‘பிரஜா சக்தி – ஆயிரம் கிராமங்கள்’ வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாளை காலை 9.00 மணிக்கு, கம்பஹா மாவட்டத்தின் மஹர பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அம்பன்கஸ்பிட்டிய பகுதியில் நடைபெறவுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
