மசகு எண்ணெய் விலை 2 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்வு!
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று (01) 2 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, WTI ரக மசகு எண்ணெயின் விலை 2.37 சதவீதம் அதிகரித்து, ஒரு பீப்பாய் 89.73 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
அதேவேளை, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை 2.16 சதவீதம் உயர்ந்து, ஒரு பீப்பாய் 93.28 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
உலக சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு, எதிர்காலத்தில் எரிபொருள் விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Tags:
உலகம்
