நிதி ஆபத்தில் அரச நிறுவனங்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிக்கை!
அரச நிறுவனங்களின் நிதி ஆபத்து குறித்த எச்சரிக்கை அறிக்கையில், பல முக்கிய அரச நிறுவனங்கள் இன்னும் அதிக நிதி ஆபத்து மட்டத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா சதொச, மில்கோ நிறுவனம், சீனிக் கூட்டுத்தாபனம் மற்றும் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் ஆகியவை அதிக நிதி ஆபத்து மட்டத்தில் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான அரசாங்க நிதி உத்தி பிரகடனத்தில், இந்த நிறுவனங்களில் தொடர்ச்சியாக ஏற்படும் நட்டங்கள், பலவீனமான பணப்புழக்கம் மற்றும் அதிக கடன் சுமை ஆகியவை முக்கிய காரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட 12 அரச நிறுவனங்களின் நிதி நிலைமை ஆய்வு செய்யப்பட்டதில் இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், இலங்கை மின்சார சபை, இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் துறைமுக அதிகாரசபை போன்றவை விலை திருத்தங்கள் மற்றும் செயல்பாட்டு மாற்றங்களின் பின்னர் ஒப்பீட்டளவில் மேம்பட்ட நிதி நிலையை காட்டினாலும், அவை இன்னும் குறைந்த ஆபத்து மட்டத்திலேயே இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அரச நிறுவனங்களின் நிதி குறிகாட்டிகளில் ஏற்பட்ட மேம்பாடு, சில நஷ்டங்கள் மற்றும் கடன்கள் மகா திறைசேரியால் ஏற்கப்பட்டதன் விளைவாகும் எனவும், இது ஆபத்தை முழுமையாக நீக்காது என்றும், ஆபத்தை மாற்றும் நிலை மட்டுமே எனவும் அறிக்கை எச்சரிக்கிறது.
அத்துடன், அரச நிதி ஆபத்துகளை குறைப்பதற்காக செயல்பாட்டு மறுசீரமைப்பு, விலை திருத்தங்கள், செலவுக் கட்டுப்பாடு, கடன் மேலாண்மை மற்றும் நிதி வெளிப்படைத்தன்மை ஆகிய பல நடவடிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)