பொசன் பூரணை தினத்தன்று விற்பனை செய்ய குடிநீர் போத்தல்களில் தயாராக வைக்கப்பட்டிருந்த மதுபானம்!


பொசன் பூரணை தினத்தன்று விற்பனை செய்வதற்காக தயாராக வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மதுபானத் தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் கலால் வரி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மதுபானங்கள் குடிநீர் போத்தல்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபருடன் சேர்த்து கைப்பற்றப்பட்ட மதுபானத் தொகையும் கலால் வரி அதிகாரிகளின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.