அரச ஊழியர்களுக்கு 20 கிலோ அரிசி வழங்கும் புதிய திட்டம்!
அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் பணம் செலுத்தும் அடிப்படையில் 20 கிலோ அரிசி வழங்கும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், சிவப்பு அரிசி மற்றும் நாட்டரிசி ஆகியவற்றை இவ்வாறு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அரச ஊழியர்களுக்கு சலுகை விலையில் 20 கிலோ அரிசி வழங்கப்படும் எனவும், அதில் 10 கிலோ வீதம் இரண்டு பொதிகளாக சிவப்பு அரிசி மற்றும் நாட்டரிசி வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தவணை முறையில் பணம் செலுத்தும் அடிப்படையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இதற்காக வவுச்சர் ஒன்று வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வவுச்சர் மூலம் சதொச அல்லது கூட்டுறவு விற்பனை நிலையங்களில் அரிசியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் கொள்வனவு செய்யும் நெல்லை அரிசியாக மாற்றி விநியோகிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இது செயல்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
