தமிழ் திரையுலகின் பிரபல நடிகரும் இயக்குநருமான கே. பாக்கியராஜ் காலமானார்!
தமிழ் திரையுலகின் பிரபல நடிகரும் இயக்குநருமான கே. பாக்கியராஜ் (73) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
திடீர் மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகிலுள்ள வெள்ளாங்கோயிலில் 1953ஆம் ஆண்டு பிறந்த கே. பாக்கியராஜ், இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்து பின்னர் தமிழ் திரையுலகில் தனித்துவமான இயக்குநர் மற்றும் நடிகராக உயர்ந்தார்.
பல வெற்றிப்படங்களை வழங்கிய அவர், தனது தனித்துவமான திரைக்கதை பாணியால் ரசிகர்களிடையே தனி இடத்தைப் பெற்றிருந்தார்.
அண்மையில் இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்குப் பிறகு, கே. பாக்கியராஜின் மறைவும் தமிழ் திரையுலகிற்கு மற்றொரு அதிர்ச்சிகரமான இழப்பாக பார்க்கப்படுகிறது.
Tags:
இந்திய செய்தி
