நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரிப்பு – 50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!
நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வருவதால், பல வைத்தியசாலைகளில் இட நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது 14 மாவட்டங்களில் டெங்கு பரவல் பதிவாகியுள்ளது.
இதனை கட்டுப்படுத்தும் நோக்கில், 600 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய 3 நாள் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் பல பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பு ஹூணுப்பிட்டிய கங்காராம விகாரைக்கு அண்மையிலுள்ள பேர வாவியை சுத்தப்படுத்தும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Tags:
இலங்கை செய்தி
