சூரிய மின்சக்தி கட்டமைப்புகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!


மின்சார கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணும் நோக்கில், நாளை (27) முதல் 29ஆம் திகதி வரை, கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவாட்டுக்கு மேற்பட்ட சூரிய மின்சக்தி (Solar Power) அமைப்புகளை கொண்ட நுகர்வோர், அவற்றை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யுமாறு வலுசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இல்யாஸ் முஹம்மது அர்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (26) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு அமைப்புகளை தற்காலிகமாக நிறுத்துவதன் மூலம் கடந்த வெசாக் தினத்தில் ஏற்பட்ட திடீர் மின்சாரத் தடையைத் தவிர்க்க முடியும் என தெரிவித்தார்.

மேலும், இந்த நடவடிக்கை மின்கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.