அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக பல பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகத் தடை!
லபுகம – கலட்டுவாவவிலிருந்து மஹரகம வரையிலான பிரதான நீர் விநியோகக் குழாயில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக பல பகுதிகளில் தற்காலிக நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை (24) மாலை 6.00 மணி முதல் மறுநாள் (25) மாலை 6.00 மணி வரை 24 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நீர் விநியோகத் தடை கலகெதர, ஹோமகம, கொட்டாவ, பன்னிப்பிட்டிய, பெலன்வத்த மற்றும் மஹரகம பகுதிகளில் அமுல்படுத்தப்படவுள்ளது.
குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையான அளவு நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
