எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செங்கோலைத் தூக்க முயன்றதால் நாடாளுமன்றில் பரபரப்பு!


பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்வின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செங்கோலைத் தூக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய சபை அமர்வின் போது அவசர விவாதம் ஒன்றை நடத்துவதற்காக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா உள்ளிட்ட உறுப்பினர்கள் குழுவொன்று சபாநாயகரிடம் முறைப்படி பிரேரணை ஒன்றை சமர்ப்பித்திருந்தது.

எனினும், குறித்த அவசர விவாதக் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்ததுடன், அதற்காக சபை நேரத்தை ஒதுக்க முடியாது என அறிவித்தார்.

சபாநாயகரின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். தொடர்ந்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான வாதப்பிரதிவாதங்களும் கூச்சல் குழப்பங்களும் ஏற்பட்டன.

இதன்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செங்கோலைத் தூக்க முயன்றதாக தெரிவிக்கப்படுவதுடன், அங்கு தள்ளுமுள்ளு நிலையும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சபை நடவடிக்கைகளை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்காக சபாநாயகர் பாராளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

இந்த சம்பவம் இன்று நாடாளுமன்ற வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.