டெங்கு நோயால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 29 ஆக உயர்வு!


நடப்பாண்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (22) நள்ளிரவு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நாட்டில் மொத்தமாக 47,530 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஜூன் மாதத்தில் மட்டும் 13,689 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்த நோயாளர்களில் 51.90% மேல் மாகாணத்திலும், 16.18% தென் மாகாணத்திலும் பதிவாகியுள்ளனர். இதனிடையே, டெங்கு பரவும் அதிக ஆபத்து உள்ள 112 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.

மாவட்ட அடிப்படையில், கொழும்பில் 9,983 நோயாளர்கள், கம்பஹாவில் 8,809 நோயாளர்கள் மற்றும் மாத்தறையில் 3,446 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.