எபோலா வைரஸ் பரவல் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்!
ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் தொற்று சில இடங்களில் பதிவாகி வரும் நிலையில், இலங்கையில் உடனடி பரவல் அபாயம் இல்லை என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர் சம்மேளனத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
அவரது கூற்றுப்படி, இதுவரை சர்வதேச அளவில் 246 சந்தேகத்திற்கிடமான தொற்றுகள் மற்றும் 65 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இருப்பினும், தற்போதைய நிலைமை உலக சுகாதார அமைப்பின் கண்காணிப்பில் இருப்பதால், மற்ற நாடுகளுக்கு பரவுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகள், உடல்நலக் குறைவு அல்லது அறிகுறிகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் அருகிலுள்ள அரச மருத்துவமனை அல்லது தகுதியான மருத்துவரை அணுக வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நோய் பரவலை தடுக்கும் வகையில் விமான நிலையங்களில் பரிசோதனை நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என சுகாதார அதிகாரிகளுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.
சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதன் மூலம் இலங்கையில் இந்த நோய் பரவலைத் தடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
