நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் 5 நாட்கள் விசேட விடுமுறை!
புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு, இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் 2026 மே 27 முதல் மே 31 வரை விசேட விடுமுறை வழங்க கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலைகளின் முதலாம் தவணை விடுமுறை கால அட்டவணையையும் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, அனைத்து முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் குறித்த விடுமுறை நாட்களை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், விடுமுறை காலம் நிறைவடைந்ததையடுத்து 2026 ஜூன் 1 ஆம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளும் வழமைபோன்று மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் தொடர்பான உத்தியோகபூர்வ சுற்றுநிருபங்கள் மற்றும் மேலதிக அறிவுறுத்தல்கள் ஏற்கனவே அனைத்து மாகாண கல்வித் திணைக்களங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Tags:
இலங்கை செய்தி
