தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!


இலங்கையில் இன்று (20) தங்கத்தின் விலையில் சிறிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் (19) 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.393,000 ஆக இருந்த நிலையில், இன்று அது ரூ.1,000 குறைந்து ரூ.392,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

தற்போதைய சந்தை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.392,000 ஆகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.360,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.49,000 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.45,075 ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் காரணமாக, எதிர்காலத்தில் தங்க விலையில் மேலும் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.