அஸ்வெசும பயனாளிகளுக்கான முக்கிய அறிவிப்பு!
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் முதற்கட்ட தகவல் புதுப்பிப்பு நடவடிக்கைகளுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் வரும் மே 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதனால், கணக்கெடுப்பு பணிக்காக வீடுகளுக்கு வருகை தரும் உத்தியோகத்தர்களுக்கு சரியான மற்றும் முழுமையான தகவல்களை வழங்கி தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு பயனாளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், நலன்புரி நன்மைகளைப் பெறும் நோக்கில் தவறான தகவல்கள் அல்லது போலியான ஆவணங்கள் சமர்ப்பிப்பது சட்டரீதியாக தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags:
இலங்கை செய்தி
